ColourMedia
WhatsApp Channel
Homeநீர்கொழும்பு செய்திகள்நீர்கொழும்பு நகர மத்தியில் இயங்காமல் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரம் தொடர்பாக பதில் சொல்லவேண்டியவர்கள் யார்?

நீர்கொழும்பு நகர மத்தியில் இயங்காமல் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரம் தொடர்பாக பதில் சொல்லவேண்டியவர்கள் யார்?

0Shares

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன அவர்களின் அவர்களின் ஆட்சிக்காலத்தில் நகர உதயம் வேலைத்திட்டத்தின் கீழ் அப்போதய பிரதமர் ரணசிங்க பிரேமதாச அவர்களினால்  இலங்கையில் சில முக்கிய நகரங்களின் மத்தியில் மிக உயரமான மணிக்கூட்டு கோபுரங்கள் அமைக்க பட்டன. இவ் மணிக்கூட்டு கோபுரங்களை பராமரிக்கும் பொறுப்பை உள்ளூராட்சி மன்றங்களுக்கு(நகரசபை)  வழங்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் இலங்கையில் மிக பிரபல்யமான சுற்றுலா நகரங்களின் ஒன்றான நீர்கொழும்பு மாநகரத்தின் மத்தியிலும்  1988ம் ஆண்டு மே மாதம்  18ம் திகதிஅப்போதய பிரதமர் ரணசிங்க பிரேமதாச அவர்களினால்   மிகஉயரமான   மணிக்கூட்டு கோபுரம்  திறந்து வைக்கப்பட்டது. (அப்போதைய நீர்கொழும்பு மேயராக சரத்சந்திர குணரட்ன அவர்கள் செயற்ப்பட்டார்)

வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வந்தவுடன் முதலாவதாக வரும் சுற்றுலா நகரமான நீர்கொழும்பு நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரம் நீர்கொழும்பின் அடையாள சின்னங்களின் ஒன்றாகவும் உள்ளது.

ஆரம்ப காலத்தில் மணிக்கூட்டு கோபுரத்தில்  இலக்கங்களால்(ஒத்திசை கடிகாரம்) ஆன  கடிகாரமே  காணப்பட்டன. அப்போதைய காலகட்டத்தில்  கோபுரங்களை சுற்றி விளம்பரங்கள் வைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது இவ் விளம்பரத்திற்க்காக  பணமும் விளம்பரதாரர்களிடம் இருந்து மாநகர சபையினால் பெற்றுக்கொள்ளபட்டது.

கடந்த ஒருவருடத்திற்கு முன்பாக  நீர்கொழும்பு மணிக்கூட்டு கோபுரம் சற்று நவீனமயப்படுத்தப்பட்டு இலத்திரனியல் கடிகாரத்திற்கு மாற்றப்பட்டு  மணிக்கூட்டு கோபுரத்தை சுற்றி விளம்பரம் வைக்கும் நிறுவனங்கள் மணிக்கூட்டு கோபுரத்தை பராமரிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அவ்வாறு பராமரிக்கும் நிறுவனம்  கோபுரத்தை சுற்றி தங்களால்  வைக்கப்பட்டும் விளம்பரத்திற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக எமக்கு அறியக்கிடைத்தது.

தற்போது முறையான பராமரிப்பு இல்லாததன் காரணமாக மணிக்கூட்டு கோபுரத்தில் உள்ள கடிகாரம் கடந்த பல நாட்களாக இயங்காமல் உள்ளது. ஆனாலும் குறித்த விளம்பர நிறுவனத்தின் விளம்பரங்கள் இன்னும் இவ் கோபுரத்தை சுற்றி இருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

 

தேர்தல் காலங்களில் மட்டும் தங்கள் கட்சி கொடிகளை கட்டுவதற்கு நினைவு வரும் இவ் மணிக்கூட்டு கோபுரம் மற்ற காலங்களில் அரசியல் சம்பந்தப்பட்டவர்களுக்கு நினைவு வராமல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கின்றது.

இவ் மணிக்கூட்டுக்கோபுரம் பராமரிப்பு தொடர்பாக பதில் கூறவேண்டியவர்கள் யார் ? நீர்கொழும்பு மாநகரசபை முதல்வர்(மேயர்) உட்பட மாநகர சபை உறுப்பினர்களே நீங்கள் தான் இதற்க்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது உங்களின் கவனத்திற்கு.        

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments