எதிர்வரும் 29 ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
சம்பள பிரச்சினைக்கு சரியான தீர்வு கிடைக்கப் பெறாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புகையிரத ஊழியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் நேற்று (23) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வு ஒன்றும் எட்டப்படவில்லை என புகையிரத தொழிற்சங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.