ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுஅதிக விலைக்கு தேங்காய் விற்ற 28 பேருக்கு சட்ட நட­வ­டிக்கை

அதிக விலைக்கு தேங்காய் விற்ற 28 பேருக்கு சட்ட நட­வ­டிக்கை

0Shares

மத்­திய மாகா­ணத்தில் நிர்­ணய விலையை விட கூடுதல் விலைக்கு தேங்காய் விற்­ப­னை யில் ஈடு­பட்ட 28 வியா­பா­ரி­க­ளுக்கு எதி­ராக நுகர்வோர் விவ­கார அதி­கார சபை­யி­னரால் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

கண்டி, மாத்­தளை மற்றும் நுவ­ரெ­லியா மாவட்­டங்­களில் கடந்த மூன்று நாட்­க­ளாக 9, 10 மற்றும் 11 ஆம் திக­தி­களில் மேற்­கொண்ட திடீர் சோத­னை­யின்­போதே நிர்­ணய விலையை விடக் கூடுதல் விலையில் தேங்காய் விற்­பனை செய்த வியா­பா­ரிகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக நுகர்வோர் விவ­கார சபையின் மத்­திய மாகாண உதவிப் பணிப்­பாளர் எம்.எஸ். நசீர் தெரி­வித்தார்.

தேங்காய் ஒன்றின் அதி­க­பட்ச சில்­லறை விலை 75 ரூபா என அண்­மையில் வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த நிலையில், நாடு முழு­வதும் நுகர்வோர் விவ­கார அதி­கார சபை­யினால் திடீர் சோதனை நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இதன் பிர­காரம் மைசூர் பருப்பு (கிலோ ரூபா 130/-), கட்டா கரு­வாடு (கிலோ ரூபா 1000/-), சாலையா கரு­வாடு (கிலோ ரூபா 420/-), தேங்காய் (ரூபா 75/-) போன்ற நுகர்வுப் பொருட்­க­ளுக்கு அர­சாங்­கத்­தினால் விலை நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் அதிக விலைக்கு நுகர்வுப் பொருட்­களை விற்­பனை செய்த குற்­றச்­சாட்டின் பேரில், கண்டி மாவட்­டத்தில் 45 பேரும், மாத்­தளை மற்றும் நுவ­ரெ­லியா மாவட்­டங்­களில் தலா 23 பேரும் நுகர்வோர் விவ­கார அதி­கா­ரி­களால் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர்.

இந்த 91 வியா­பா­ரி­க­ளுக்கும் எதி­ராக வழக்குத் தொடர்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண உதவிப் பணிப்பாளர் எம்.எஸ். நசீர்  மேலும் தெரிவித்துள்ளார்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments