போதைப்பொருள் துர்நடத்தை தொடர்பில் நேரடியாக அறிவிக்கும் அவசர தொலைபேசி இலக்க சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் போதைப்பொருள் பாவனை குறித்து அறிவிப்பதற்காக இந்த புதிய தொலைபேசி சேவை அமுல்படுத்தப்படும்.
இது தொடர்பான இணையத்தளமும் திறந்து வைக்கப்படவுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புக் குழுவை அமுல்படுத்தும் விசேட செயற்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புதிய இலக்கத்தின் கீழ் தனிப்பட்ட மற்றும் நம்பத்தகுந்த தகவல்களை அறிவிக்க முடியும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் (கம்பஹா,நீர்கொழும்பு,களனி) ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள படும் போதைப் பொருள் வியாபாரம், சட்ட விரோத மதுபான வியாபாரம் தொடர்பான தகவல்களை இரகசிமாகவும் நம்பிகையாகவும் எமக்கு தெரியப்படுத்தவும்.
நன்றி
தேசபந்து .தென்ன கோன்
பிரதி பொலிஸ்மா அதிபர்
(மேல் மாகாணம்,வடக்கு)
- நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு 0713680001, 071-369-0001
- களனி பொலிஸ் பிரிவு 0713210001
- கம்பஹா பொலிஸ் பிரிவு 0713580001