வெலிக்கடை சிறையில் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து 52 பெண் கைதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவத்துள்ளது.
மேலும் எட்டு சிறைச்சாலை அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
வெலிக்கடை சிறையின் கூரைமீதேறி இன்று மீண்டும் சில பெண் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெலிக்கடை விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரால் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இதில், பின்னர் மேலும் சில பெண் கைதிகளும் இணைந்துகொண்டிருந்தனர்.
இந்த சூழ்நிலையில் சில பெண் கைதிகள் சிறைச்சாலையை உடைத்து வெளியேற முற்பட்டதாகவும், நிலைமையை கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகள் தலையிட்டபோது, அங்கு பதற்ற நிலை உருவானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது காயமடைந்த எட்டு அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சில பெண் கைதிகளும் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் கைதுசெய்யப்பட்ட 52 பெண் சிறைக் கைதிகளையும் சிறை மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
செய்தி உதவி- லங்காதீப,அததெரன