க்ளைபோசேட் மீதான தடை தற்போது உலகளாவிய பேசுபொருளாக மாறி இருப்பதாக ஏ.எஃப்.பி சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.
க்ளைபோசேட் கலைநாசினி புற்றுநோய் காரணியாக இருக்கக்கூடும் என்ற உலக சுகாதார ஒழுங்கமைப்பின் எச்சரிக்கையால் பல நாடுகள் இதனை தடை செய்து வருகின்றன.
இலங்கையிலும் இது தடை செய்யப்பட்டிருந்த போதும், கடந்த ஜுலை மாதம் அந்த தடை நீக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க நீதிமன்றம் ஒன்றினால், க்ளைபோசேட் தயாரிப்பு நிறுவனம் ஒன்றுக்கு எதிராக, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் தாக்கல் செய்திருந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் குறித்த நிறுவனம் அந்த விவசாயிக்கு 290 மில்லியன் டொலர்களை நட்டயீடாக வழங்க உத்தரவிடப்பட்டது.
இதனை அடுத்து க்ளைபோசேட் மீதான எச்சரிக்கை பல நாடுகளில் மேலோங்கி இருப்பதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.