ColourMedia
WhatsApp Channel
Homeசிறப்புக்கட்டுரைகள்இலங்கையில் ஆகக் கூடுதலான சம்பளம் பெறும் அரச பணியாளர்கள் இவர்கள் தான்…..!! இவர்களே சம்பள அதிகரிப்பை...

இலங்கையில் ஆகக் கூடுதலான சம்பளம் பெறும் அரச பணியாளர்கள் இவர்கள் தான்…..!! இவர்களே சம்பள அதிகரிப்பை கோருவது நியாயமா?

0Shares

ஒன்றரை லட்சம் ரூபா மாதச் சம்பளம் பெற்றுக் கொள்ளும் புகையிரத திணைக்களப் பணியாளர்கள் மேலும் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோருவது நியாயமற்றது என தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியர்களும் புகையிரத திணைக்களப் பணியாளர்களுமே, ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளும் ஒட்டுமொத்த அரச பணியாளர்களில் மாதமொன்றுக்கு ஒன்றரை லட்சத்திற்கும் அதிகளவில் மொத்தச் சம்பளம் பெற்றுக் கொள்கின்றனர்.

திறைசேரியின் பேச்சாளர் ஒருவர் இந்த தகவல்களை கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ளார்.புகையிரத திணைக்களத்தின் என்ஜின் சாரதியின் மாதாந்தச் சம்பளம் சுமார் இரண்டரை லட்சம் ரூபா எனவும், இவர்கள் மாதமொன்றுக்கு 10000 ரூபா வரையில் உழைக்கும் போதே செலுத்தும் வரியைச் செலுத்துகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒட்டுமொத்த அரச சேவையைச் சேர்ந்த பணியாளர்களில் புகையிரத திணைக்கள பணியாளர்கள் கூடுதல் சம்பளம் பெற்றுக் கொள்கின்றனர்.இந்த நிலையில் மேலும் சம்பளங்களை உயர்த்தினால் அது ஏனைய துறைகளைச் சேர்ந்த பணியாளர்களின் சம்பள முரண்பாட்டுக்கு வழியமைக்கும் என தெரிவித்துள்ளார்.

புகையிரத என்ஜின் சாரதி, புகையிரத கட்டுப்பாட்டாளர், புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட விசேட தரமுடைய அதகாரிகளின் மாதாந்த அடிப்படைச் சம்பளம் 44600 ரூபாவாகும், இந்த தொகையை இவர்கள் 56205 ரூபாவாக உயர்த்துமாறு கோருகின்றனர்.

Railway Strikers SALARY SLIPS

Railway Strikers SALARY SLIPS #Train #Salary #Strike #Protest #CGR #LKA #Wnow

Posted by W NOW on Friday, August 10, 2018

பொறியியலாளர்கள், கணக்காய்வாளர்கள், திட்டமிடலாளர்கள், வாஸ்து நிபுணர்கள், வைத்திய சேவை, அளவையாளர், தொழில்நுட்ப உதவியாளர், பொலிஸ் அத்தியட்சகர், உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோருக்கு இவ்வளவு அதிகளவு அடிப்படைச் சம்பளங்கள் கிடைக்கப் பெறுவதில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத திறைசேரியின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments