இன்று ஆடி அமாவாசையாகும். இது இந்துக்களின் நாளேட்டில் முக்கியமான தினமாகத் திகழ்கிறது.
ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன், சந்திரன், பூமி ஆகிய கிரகங்களும் ஒரு நேர் கோட்டில் அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது
இன்றைய தினத்தில் இந்துக்கள் விரதமிருந்து முன்னோரை நினைவுகூர்ந்து, பிதிர்க்கடன் நிறைவேற்றுவார்கள்.
யாழ்ப்பாணத்து மக்கள் புரதான காலம் தொடக்கம் கீரிமலை நகுலேஸ்வரத்தில் தீர்த்தமாடுவார்கள். மட்டக்களப்பு வாழ் மக்கள் திருக்கோவிலில் வங்கக் கடலிலும், மாமாங்கத்து அமிர்தகழி தீர்த்தத்திலும், தீர்த்தமாடுவர். திருகோணமலை வாழ் மக்கள் கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தமாடி பிதுர் கடனைச் செலுத்துவர்.
ஆடி அமாவாசை காலத்தில் கடல் அல்லது புனித ஆறுகளில் நீராடி இறைவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கி விமோசனம் பெறமுடியும் என்கிற நம்பிக்கை இந்து சமயத்தினரிடம் உள்ளது.