ColourMedia
WhatsApp Channel
Homeநீர்கொழும்பு செய்திகள்நீர்கொழும்பு அரிமா கழகத்தால் (Lions Club of Negombo Catamaran,Kotehena Circle) ...

நீர்கொழும்பு அரிமா கழகத்தால் (Lions Club of Negombo Catamaran,Kotehena Circle) நடத்தப்பட்ட  க.பொ.தா சாதாரணதர மாணவர்களுக்கான கணித பாட சிறப்பு கருத்தரங்கு

0Shares

நீர்கொழும்பு அரிமா கழகம் (Lions Club of Negombo Catamaran) மற்றும் (Lions Club of Kotehena Circle) இணை‌ந்து நடத்திய க.பொ.தா சாதாரணதர மாணவர்களுக்கான கணித பாட கருத்தரங்கு நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் கடந்த வியாழக்கிழமை(02) இடம்பெற்றது.

இன் நிகழ்வை சர்வதேச லயன்ஸ் கழக ஆளுனர் (Lions Club International 306B1) லயன் தேவா பீட்டர் அவர்கள் ஆரம்பித்துவைத்தார்.  இந்த நிகழ்வில் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி மற்றும் தோப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ் மகாவித்தியாலய  க.பொ.தா சாதாரணதர மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.  கருத்தரங்கு கணித பாட சிறப்பு ஆசிரியர் S.K . தலையரட்ணம் அவர்களால்  சிறப்பாக நடாத்த பட்டது.

இந்த நிகழ்வானது லயன்ஸ் கழகத்தில் அங்கத்துவம் வகிக்கும் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி பழைய மாணவர்களும் பங்குபற்றி இருந்தமை சிறப்பம்சமாகும். 

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments