மேல் மாகாணத்தில் ஆசிரியர் சேவைக்காக புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்வரும் பாடசாலை விடுமுறையின் பின்னர் பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இதுதொடர்பாக மேல் மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் விமல் குணரட்ன தெரிவிக்கையில் முதலாவது குழுவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது குழுவுக்கான பயிற்சி நடவடிக்கைகள் ஆகஸ்ட் இரண்டாம் திகதி ஆரம்பமாகும் என்று தெரிவித்தார்.
அடுத்த வருடம் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முக பரீட்சை அடுத்த மாதம் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.