ColourMedia
WhatsApp Channel
Homeவெளிநாட்டுசட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குல் செல்ல முற்பட்ட இலங்கையர் ஐவர் உட்பட 13 பேர் யுக்ரெயின்...

சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குல் செல்ல முற்பட்ட இலங்கையர் ஐவர் உட்பட 13 பேர் யுக்ரெயின் எல்லையில் கைது

0Shares

யுக்ரெயின் எல்லையை சட்டவிரோதமாக கடந்த  இலங்கை உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யுக்ரெயினின் எல்லை பாதுகாப்பு சேவைப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

போலாந்து – யுக்ரெயின் எல்லைப் பகுதியில் எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் பயணித்த ரஷ்ய மற்றும் அசர்பஜான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இரண்டு பேர் கைதாகி இருந்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 5 இலங்கையர்களை அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்தது.

இதனை அடுத்து மேலும் பலர் கைதாகியுள்ளனர்.

போலாந்தின் எல்லையில் கைதான வெளிநாட்டவர்களும் யுக்ரெயினுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

அவர்களுக்கு எதிராக யுக்ரெனியில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments