பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் வௌியிடப்படுகின்ற முரண்பாடுகளை தோற்றுவிக்கும் போலி தகவல்களை நீக்குவதற்கு பேஸ்பு பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் முரண்பாடுகளை தோற்றுவிக்க காரணமாக, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பதிவுகள் இருந்துள்ளதால் பேஸ்புக் நிறுவனம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதன்படி முரண்பாடுகளை தோற்றுவிக்கும் பதிவுகள், படங்களை அகற்றும் நடவடிக்கைகளை பேஸ்புக் நிறுவனம் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்து பேஸ்புக் நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் பேஸ்புக்கில் பதியப்படுகின்ற பதிவுகளை கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொறு நாடுகளிலும் இருக்கின்ற பேஸ்புக் நிறுவனத்தின் அமைப்புக்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகளின் பின்னணியில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட போலியான பதிவுகளும் காரணமாக அமைந்ததுடன், இதனால் சில தினங்களுக்கு பேஸ்புக் பயன்பாட்டுக்கு இலங்கையில் தடைவிதிக்கப்பட்டிருந்தன.