200Kg எடை கொண்ட நான்கு டொல்பின் மீன்களை வெட்டி விற்பனை செய்த கருவாடு வியாபாரி ஒருவர் இன்று நீர்கொழும்பு பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு என்டேசன் வீதியை சேர்ந்த 33 வயதுடைய ஒருவராவார்.
அழிவடைந்து வரும் டொல்பின் மீன்கள் இலங்கையில் பாதுகாக்கப்பட்டு வரும் கடல் வாழ் உயிரினங்களாகும். இவைகளை பிடிப்பது சட்டவிரோதமாகும்.
சில மீனவர்களால் இரகசியமாக பிடிக்கப்படும் டொல்பின் மீன்கள் வெட்டப்பட்டு இரகசியமான முறையில் கருவாடாக காயவைத்து கூடிய விலைக்கு விற்பனை செய்வதாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.