ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுகூட்டமைப்பின் உடைவு யாருக்கு சாதகம்?

கூட்டமைப்பின் உடைவு யாருக்கு சாதகம்?

0Shares

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களில் போட்­டி­யிடப் போவ­தில்லை என்று ஈ.பி.ஆர்.எல்.எவ். முடி­வெ­டுத்­ததை அடுத்து, கூட்­ட­மைப்பு பல­வீ­ன­ம­டை­வது போன்ற தோற்­றப்­பாடு காணப்­பட்­டது.

எனினும், அடுத்த சில நாட்­க­ளி­லேயே, ஈ.பி.ஆர்.எல்.எவ். – தமிழ்க் காங்­கிரஸ் கூட்­டணி முயற்சி முளை­யி­லேயே கருகிப் போனதும், ஜன­நா­யகப் போரா­ளிகள் கட்சி, வரதர் அணி போன்­ற­வற்­றுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்­கான முன்­னா­யத்­தங்­களில் இறங்­கி­யதும், கூட்­ட­மைப்பு மீண்டும் பல­ம­டை­வ­தற்­கான சாத்­தி­யப்­பா­டு­களை அதி­க­ரிக்கச் செய்­தது.

எனினும், உள்­ளூ­ராட்சித் தேர்தல் ஆசனப் பங்­கீட்டுப் பேச்­சுக்­களில் ஏற்­பட்­டுள்ள இழு­ப­றி­களால் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பல­வீ­னப்­படும் நிலையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இந்­தப்­பத்தி எழு­தப்­படும் போது, ரெலோவும், தமி­ழ­ரசுக் கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யி­டு­வ­தில்லை என்ற முடிவை எடுத்­தி­ருக்­கி­றது. புளொட்டும் அதி­ருப்தி நிலையில் இருக்­கி­றது.

எனினும், இரண்டு கட்­சி­க­ளையும் இணக்­கப்­பாட்­டுக்குக் கொண்டு வரும் முயற்­சி­களும் நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. மற்­றொரு புறத்தில் மாற்று அணி­களும் அவர்­களை வளைத்துப் போடு­வதில் குறி­யாகச் செயற்­ப­டு­கின்­றன.

இடைக்­கால அறிக்­கையைக் காரணம் காட்­டியே தமி­ழ­ரசுக் கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யி­டு­வ­தில்லை என்ற முடிவை ஈ.பி.ஆர்.எல்.எவ். எடுத்­தி­ருந்­தது. அதனை ஒரு கொள்கை சார்ந்த முடிவு போலவும் காட்டிக் கொண்­டது.

எனினும், ரெலோ அவ்­வாறு வெளி­யே­ற­வில்லை. தமி­ழ­ரசுக் கட்­சி­யு­ட­னான ஆசனப் பங்­கீட்டு பேச்­சுக்­களில் இணக்­கப்­பாடு ஏற்­ப­டாத நிலையில் தான் அதி­ருப்­தி­யுடன் இந்த முடிவை எடுத்­தி­ருந்­தது.

வெளி­யேறும் முடிவு எடுத்த பின்னர், செய்­தி­யா­ளர்­க­ளிடம் கருத்து வெளி­யிட்ட ரெலோ பொதுச்­செ­யலர் சிறி­காந்தா, தமி­ழ­ரசுக் கட்சி விட்­டுக்­கொ­டுப்­பற்ற- விடாப்­பி­டி­யான போக்கில் இருப்­பதால் வேறு வழி­யின்றி இந்த முடிவை எடுத்­த­தாக கூறி­யி­ருந்தார்.

உள்­ளூ­ராட்சித் தேர்தல் ஆச­னப்­பங்­கீடு தொடர்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளுக்­கி­டையில் பேச்­சுக்கள் தொடங்­கப்­ப­டு­வ­தற்கு பல வாரங்கள் முன்­ன­தா­கவே, தமி­ழ­ரசுக் கட்­சி­யுடன் தனி­யாகப் பேச்­சுக்­களை ஆரம்­பித்­தி­ருந்­தது ரெலோ.

ஆனாலும், கடை­சியில் அந்தக் கட்­சியே தமி­ழ­ரசுக் கட்­சியில் இருந்து வெளி­யேறிச் செல்லும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. இது முன்­கூட்­டியே எடுக்­கப்­பட்ட முடிவு என்­றொரு தக­வலும் உள்­ளது,

ஆனந்­த­சங்­கரி தலை­மையில் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணி­யுடன் ஈ.பி.ஆர்.எல்.எவ். இணைந்து அமைக்கும் கூட்­ட­ணியில் இணைந்து கொள்­வ­தற்­கா­கவே, ரெலோ இந்த முடிவை எடுத்­தது என்­றொரு கதையும் உள்­ளது.

எனினும் இந்தப் பத்தி எழு­தப்­படும் வரையில் ரெலோ அடுத்­த­கட்டம் குறித்த முடிவை வெளி­யி­ட­வில்லை.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் தமி­ழ­ரசுக் கட்சி பிர­தான பங்­காளி. கூட்­ட­மைப்பின் முடி­வு­களில் ஆதிக்கம் செலுத்தும் கட்­சியும் கூட. அதை­விட கூட்­ட­மைப்பில் உள்ள கட்­சி­க­ளி­லேயே பல­மா­னதும் இது தான்.

தமி­ழ­ரசுக் கட்சி ஏனைய பங்­காளிக் கட்­சி­களை பல­வீ­னப்­ப­டுத்தும் வகை­யிலும், உதா­சீனம் செய்யும் வகை­யிலும் செயற்­ப­டு­கி­றது என்ற குற்­றச்­சாட்டு அண்­மைக்­கா­லங்­களில் இருந்தே வந்­தி­ருக்­கி­றது.

சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரனின் ஈ.பி.ஆர்.எல்.எவ். கூட்­ட­மைப்பை விட்டு வெளி­யே­றி­யதும் கூட அவ்­வா­றா­ன­தொரு கார­ணத்­தினால் தான். ஆனால் அந்தக் கட்சி கொள்கை முரண்­பாடு என்றே நியா­யப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

எனினும் ரெலோ அவ்­வாறு காரணம் கூற முடி­யாது. தமி­ழ­ரசுக் கட்­சியை குற்­றம்­சாட்டிக் கொண்டு வெளி­யே­றி­யி­ருக்­கி­றது. ரெலோவின் இந்த முடிவு, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒட்­டு­மொத்த எதிர்­கா­லத்தைப் பாதிக்­குமா அல்­லது வரும் உள்­ளூ­ராட்சித் தேர்தல் வரை தான் நீடிக்­குமா என்று தெரி­ய­வில்லை.

எவ்­வா­றா­யினும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் அண்­மைக்­கா­ல­மாக ஏற்­பட்டு வரும் குழப்­பங்கள், கூட்­ட­மைப்­புக்கு சாத­க­மான ஒரு விட­ய­மாக இருக்­காது. ஏனென்றால் ஏற்­க­னவே ஈ.பி.ஆர்.எல்.எவ். வெளி­யே­றி­யி­ருக்­கி­றது. ரெலோவும் வெளி­யே­றி­யி­ருக்­கி­றது. இந்த நிலையில் இப்­போது புளொட் தான் எஞ்­சி­யி­ருக்­கி­றது. புளொட்டும் கூட தான் யாழ்ப்­பாண மாவட்­டத்தில் நான்கு உள்­ளூ­ராட்சி சபை­களின் தவி­சாளர் பத­வி­க­ளையும், நிர்­வா­கத்­தையும் தன் கைக்குள் வைத்­தி­ருக்கும் அள­வுக்கு வலு­வான ஆசனப் பங்­கீட்டை எதிர்­பார்க்­கி­றது.

புளொட்டின் கோரிக்­கையும் கூட தமி­ழ­ரசுக் கட்­சி­யினால் சாத­க­மாகப் பரி­சீ­லிக்­கப்­படக் கூடிய நிலை இல்லை.

இப்­ப­டி­யான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வெறும் தமி­ழ­ரசுக் கட்­சி­யாகச் சுருங்கிப் போய் விடும் நிலை தோன்றி விடும் சூழ­லையும் அவ­தா­னிக்க முடி­கி­றது.

வடக்கு மாகா­ண­ச­பையில் முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை தமி­ழ­ரசுக் கட்சி கொண்டு வந்த போதே, அந்தக் கட்சி தனித்து விடப்­பட்­டி­ருந்­தது. ஈபி.ஆர்.எல்.எவ். புளொட், ரெலோ ஆகிய கட்­சிகள் முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ர­வாக நின்­றன. அப்­போதே, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உடைந்து விடுமோ என்ற நிலையும் ஏற்­பட்­டது. எனினும், முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கைவி­டப்­பட்­ட­தை­ய­டுத்து, அந்தப் பிரச்­சினை முடி­வுக்கு வந்­தது.

எனினும், உள்­ளூ­ராட்சித் தேர்­தலை தனித்து எதிர்­கொள்­வ­தற்கு தமி­ழ­ரசுக் கட்சி தயா­ராகி வரு­கி­றது என்ற குற்­றச்­சாட்டு பல­மா­கவே இருந்து வந்­தது. அதனை உறுதி செய்யும் வகையில், கிரா­மிய மட்­டத்தில் தமி­ழ­ரசுக் கட்சி கிளை­களை அமைத்துப் பலப்­ப­டுத்தி வந்­ததும் குறிப்­பி­டத்­தக்­கது.

சில மாதங்­க­ளுக்கு முன்னர், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரான இரா.சம்­பந்­த­னிடம், உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் தமி­ழ­ரசுக் கட்சி தனித்துப் போட்­டி­யிடப் போகி­றதா என்று, செய்­தி­யா­ளர்கள் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தனர்.

அதற்கு அவர், கூட்­ட­மைப்­பாக போட்­டி­யி­டவே விரும்­பு­கிறோம், ஒன்­று­மை­யாக செயற்­ப­டு­வதே தமது நோக்கம் என்று கூறி­யி­ருந்தார்.

இப்­போது தமி­ழ­ரசுக் கட்சி தானாக தனித்துப் போட்­டி­யிடும் முடிவை எடுக்­காத போதிலும், ஏனைய பங்­காளிக் கட்­சி­களின் அடுத்­த­டுத்த முடி­வுகள் அத்­த­கை­ய­தொரு நிலையை நோக்கித் தான் நகர்த்­தப்­ப­டு­கி­றதோ என்ற சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

புளொட்டும் ரெலோவும் ஆச­னப்­பங்­கீட்டில் அதி­க­ளவு இடங்­களைக் கோரு­வ­தாக தமிழ் அரசுக் கட்­சி­யினர் மத்­தியில் ஒரு கருத்து இருந்­தது,

அதே­வேளை தமி­ழ­ரசுக் கட்சி விட்­டுக்­கொ­டுக்­காமல் பெரு­ம­ளவு இடங்­களை தன் கட்­டுப்­பாட்டில் வைத்துக் கொள்ள முனை­கி­றது என்­பது பங்­காளிக் கட்­சி­களின் குற்­றச்­சாட்­டாக இருந்­தது. அது மாத்­தி­ரமே பிரச்­சி­னைக்­கு­ரிய விட­ய­மாகத் தெரி­ய­வில்லை.

கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளான ரெலோ­வுக்கும், புளொட்­டுக்கும், எங்கே தமி­ழ­ரசுக் கட்சி தமக்குச் செல்­வாக்­குள்ள பகு­தி­க­ளுக்­குள்­ளேயும் ஆதிக்கம் செலுத்தி விடுமோ என்ற அச்­சமும் ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

பங்­காளிக் கட்­சி­களின் சார்பில் போட்­டி­யிட்ட பல­ரையும் தம்­பக்கம் இழுத்துக் கொண்ட வர­லாற்றை தமி­ழ­ரசுக் கட்சி கொண்­டி­ருப்­பதும் இந்த அச்­சத்­துக்கு ஒரு காரணம்.

அண்­மையில் கூட ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சியில் போட்­டி­யிட்டு வடக்கு மாகா­ண­ச­பைக்குத் தெரிவு செய்­யப்­பட்ட து.ரவி­க­ரனை தமி­ழ­ரசுக் கட்சி தம் பக்கம் இழுத்­தி­ருந்­தது.

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். என்­பன, வவு­னியா, மன்னார் மாவட்­டங்­களைத் தமது கோட்­டை­யாக கருதிக் கொண்­டி­ருக்­கின்­றன.

இந்த இரண்டு மாவட்­டங்­களும் 1990இல் இருந்து, இரா­ணுவக் கட்­டுப்­பாட்டில், இருந்து வந்­தவை. அங்கு இரா­ணு­வத்­துடன் இணைந்து செயற்­படும் ஆயுதக் குழுக்­க­ளா­கவும், அர­சியல் கட்­சி­க­ளா­கவும் இவை செயற்­பட்­டவை.

தீவ­கத்தில் ஈ.பி.டி.பி. 1990இற்குப் பின்னர் செல்­வாக்குப் பெற்­றதைப் போலவே, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எல்.எவ். என்­பன, வவு­னியா, மன்னார் மாவட்­டங்­களில் இவ்­வாறு தான் செல்­வாக்குப் பெற்­றன.

அந்தச் செல்­வாக்கை தமி­ழ­ரசுக் கட்சி உடைத்துக் கொண்டு போய் விடுமோ என்ற பயம், ரெலோ, புளொட்டுக்கு உள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலில் இங்கு தமிழரசுக் கட்சிக்கு அதிக இடங்களைக் கொடுத்தால், அடுத்த பாராளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களில் தமக்கு அதிக இழப்புகள் ஏற்படும் என்ற கவலை இந்தக் கட்சிகளுக்கு உள்ளன.

யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ். இழந்ததைப் போன்ற நிலை வன்னியில் தமக்கு ஏற்பட்டு விடுமோ என்ற பயமும் கூட, தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிட ரெலோ தயங்குவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சி தனித்து விடப்படும் நிலை ஏற்பட்டுள்ளமை பங்காளிக் கட்சிகளுக்கு சாதகமாக அமையுமா என்று தெரியவில்லை.

ஆனாலும், ஒருவேளை இது தமிழரசுக் கட்சிக்கு சாதகமாக அமைந்து விட்டால், எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பங்காளிக் கட்சிகளின் நிலை படு பரிதாபமாகி விடும்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments