93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் நாளை 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி பகல் 12.00 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும். தேர்தல் நடைபெறும் திகதியை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் அன்றைய தினம் அறிவிப்பார்கள்.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட கச்சேரி சூழலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.