கதிர்காமத்திற்கு யாத்திரை செல்கின்றவர்களுக்கு வேட்டையாடப்பட்ட வனவிலங்குகளின் இறைச்சியென்று கூறி நாய் இறைச்சியை விற்பனை செய்யும் மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
இது தவிர விசமிடப்பட்டு வனவிலங்குகளை வேட்டையாடும் நடவடிக்கையொன்று குறித்தும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பான சில சுற்றிவளைப்புக்கள் கடந்த சில தினங்களில் முன்னெடுக்கப்பட்டதாக ஹம்பாந்தோட்டை வனபாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.