மைக்றோன் 20 இற்கும் குறைந்த நிறையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் தொடர்பில், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை முன்னெடுக்கப் போவதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் இறக்குமதிகளை பரிசீலிக்கும் நடவடிக்கைகளை தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் குறித்த சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் மைக்றோன் 20 இற்கும் குறைந்த நிறையுடைய பொலித்தீன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், தேசிய, சமயம், சமூகம், கலாச்சாரம் மற்றும் அரசியல் போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் பொலித்தீன் பாவனை முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.