நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு கடற்பிரதேசங்களில் கடும் காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று பிற்பகல் 1.30ற்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த காலநிலை இன்று வரை நிலவக்கூடும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு மற்றும் தெற்கு கடற்பிரதேசத்தில் 60 -65கிலோமீட்டர் வரையிலான காற்று வீசக்கூடும்.
புத்தளத்தில் இருந்து கொழும்பு வரையிலும் மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடக பொத்துவில் வரையான கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் 60 தொடக்கம் 65 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும். இந்த சந்தர்ப்பங்களில் கடல் கொந்தளிப்பாக அல்லது கடும் கொந்தளிப்பாக காணப்படும்.
கடற்தொழிலாளர்கள் மற்றும் கடல்; நடவடிக்கையில் ஈடுபடுவோர் மிக அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.