இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் எச் ஐ. வி தெற்றாளர்கள் 81 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய பாலின மற்றும் எயிட்ஸ் தெற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே இதனை எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
ஆண்களே எச்.ஐ.வி தொற்றுக்கு அதிகமாக உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்கள் 2ஆயிரத்து 800 பேர் வரையில் இருப்பதாகவும் வைத்தியர் சிசிர லியனகே குறிப்பிட்டார்.