முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்காலத்தில் ஹிட்லர் போன்று செயற்படவேண்டும் என பௌத்த மதகுருவொருவர் விடுத்த வேண்டுகோளை ஜேர்மனி கடுமையாக சாடியுள்ளது.
பௌத்தமதகுருவின் கருத்து படுமுட்டாள்தனமானது,பொறுப்பற்றது என இலங்கைக்கான ஜேர்மனியின் தூதுவர் ஜோன்ரொஹ்டே தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பௌத்தமதகுருவொருவர் வெளியிட்ட மூர்க்கத்தனமாக கருத்துக்களை ஜனாதிபதியும் பிரதமரும் கண்டித்துள்ளதை தான் முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
புனிதத்தை குறிக்கும் ஆடைகளை அணிவது நபர்கள் பொறுப்பற்ற முட்டாள்தனமான கருத்துக்களை வெளியிடுவதை தடுக்கவில்லை என்பதை பௌத்தமதகுருவின் இந்த கருத்து வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எங்களிற்கு அதிகளவு ஜனநாயகமே அவசியம் என தூதுவர் தெரிவித்துள்ளார்