அஞ்சல் பணியாளர்கள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரத போராட்டத்தை சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டமாக நீடிக்க ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தீர்மானித்துள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு இன்னும் உரிய தீர்வு கிடைக்க வில்லை என கோரி இன்று 14 ஆவது நாளாகவும் அஞ்சல் பணியாளர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனால் அரச நிறுவனங்களின் நாளாந்த செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.