கொழும்பு மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயராக அருட்திரு ஜே.டி. அந்தனி நியமிக்கப்பட்டுள்ளார்.
பாப்பரசர் பிரான்ஸிஸால் கொழும்பு மறைமாவட்டத்திற்கான புதிய துணை ஆயராக அருட்திரு ஜே.டி. அந்தனி நியமிக்கப்பட்டுள்ளார்.
துணை ஆயரை திருநிலைப்படுத்துவதற்கான திருப்பலி ஆராதனை கொழும்பு மறைமாவட்ட பேராயர், பேரருட்திரு மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் கொட்டாஞ்சேனை புனித லூசியாள் பேராலயத்தில் இன்று காலை இடம்பெற்றது.
அருட்திரு ஜே.டி. அந்தனி 1958 ஆம் ஆண்டு ஜா-எல பமுனுகமயில் பிறந்ததுடன், 1985 ஆம் ஆண்டு அருட்தந்தையாக திருநிலைப்படுத்தப்பட்டார்.