ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுவெற்றி, தோல்வியின்றி நிறைவுற்ற இலங்கை - இந்திய மூன்றாவது டெஸ்ட்

வெற்றி, தோல்வியின்றி நிறைவுற்ற இலங்கை – இந்திய மூன்றாவது டெஸ்ட்

0Shares

இலங்கை – இந்திய அணிகளுக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது.

டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதி இனிங்ஸில், 410 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு இலங்கை அணி விளையாடியது.

ஐந்து விக்கட்களை இழந்து 299 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் போட்டி நிறைவுபெற்றது. இலங்கை அணியின் அறிமுக வீரர் ரோஷன் சில்வா 154 பந்துகளில் 74 ஓட்டங்களையும் நிரோஷன் டிக்வெல்ல 72 பந்துகளில் 44 ஓட்டங்களையும் பெற்றிருந்த நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

முன்னதாக தனது மூன்றாவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்த தனஞ்சய டி சில்வா, 119 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் காயம் காரணமாக களத்தை விட்டு வெளியேறினார்.

இந்த டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு பூச்சியம் என்ற அடிப்படையில் இந்திய அணி கைப்பற்றியது.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments