மனிதாபிமானம், தராள மனப்பான்மையை வளர்பபதற்கு ரமழான் நோன்பு காலத்தில் கிடைக்கும் உந்துசக்தி அளப்பரியதாகும்.
இது முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி முழு மனித சமுதாயத்திற்கும் புதியதோர் வாழ்க்கை நோக்கினை எடுத்தியம்பும் பெறுமதிமிக்க் கிரிகையாகும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்திருக்கும் ஈதுல்பித்ர் ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
பிரதமரின் அந்தச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
முஸ்லிம் பக்தர்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, புதிய பிறையைக் கண்டதன் பின்னர் கொண்டாடும் ஈதுல் பித்ர் பெருநாள் சமத்துவம் தொடர்பான பெறுமதிமிக்க ‘அஸ்ஸவ்ம்’ எனப்படும் ரமழான் நோன்பு இஸ்லாத்தின் முக்கிய ஐந்து தூண்களில் ஒரு தூணாகும். புனித அல்குர்ஆன் உலகிற்கு இறக்கப்பட்டமை இந்த மாதத்திலேயே நினைவுகூரப்படுகின்றது.
நோன்பு நோற்றல் தொடர்பாக அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது. ‘உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்ததைப் போன்றே உங்கள் மீதும் அது விதியாக்கப்பட்டுள்ளது. (எனவே) (அதன் மூலம்) நீங்கள் (உளச்சுத்தினைப் பெற்று) பயபக்தியுடையோராகலாம்’ இதற்கமைய நோன்பின் பிரதான நோக்கம் உடல், உள, ஆன்மீகப் பரிசுத்தமாகும் என்பது தெளிவாகின்றது.
இந்தப் காலப்பகுதியில் உயர்ந்தோர், தாழ்ந்தோர். என்ற பேதமின்றி மிகுந்த அர்ப்பணிப்புடன் நோன்பு நோற்கும் சகோதர முஸ்லிம்கள் உணவு உட்கொள்ளாதிருத்தல் மாத்திரமின்றி ஏனையோரின் தேவைகள் தொடர்பில் உணர்வுபூர்வமாக நோக்கி தம்மிடம் இருப்பவற்றை ஏழை எளியவர்களுடன் பகிர்ந்துகொண்டு சகவாழ்வு வாழ்வதில் முக்கிய கவனம் செலுத்துகின்றனர்.
தம்மிடம் குடிகொண்டிருக்கும் பேராசை, ஆசை போன்ற தீயகுணங்களைக் கட்டுப்படுத்தி, மனிதாபிமானம், தராள மனப்பான்மையை வளர்பபதற்கு ரமழான் நோன்பு காலத்தில் கிடைக்கும் உந்துசக்தி அளப்பரியதாகும். இது முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி முழு மனித சமுதாயத்திற்கும் புதியதோர் வாழ்க்கை நோக்கினை எடுத்தியம்பும் பெறுமதிமிக்க சபைக் கிரியையொன்றாகும்.
அந்த ஆன்மீக, சமூகம் சார்ந்த பெறுமதிகள் உலகிற்கு ஒளியூட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை முன்னிறுத்தி சகோதர முஸ்லிம் மக்களுக்கு மகிழ்ச்சிகரமான ஈதுல் பித்ர் பெருநாளாக அமைய வேண்டும் என உளப்பூர்வமாக வாழ்த்துகிறேன் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.