நேற்று நீர்கொழும்பு கடற்கரையில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த இரண்டு மாணவர்களில் ஒருவரது சடலம் இன்று அதி காலை நீர்கொழும்பு போறதோட்டை கம்மல்தோட்டை கடல் பகுதியில் கரை ஒதுங்கி உள்ளது.
நீர்கொழும்பு தளுவகொட்டுவ சாந்த ஹானா மகாவித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி கற்கும் தளுவகொட்டுவ ஜனபத மாவதையை சேர்ந்த 16 வயதுடைய எவவடுகே அயேஸ் சத்துரங்க எனும் மாணவனின் சடலமே கரை ஒதுங்கி உள்ளது .
காணாமல் போன மேலும் ஒரு மாணவனின் தகவல் குறித்து இச் செய்தியை பிரசுரிக்கும் வரை எந்த தகவலும் கிடைக்க வில்லை.
இந்நிலையில் கடற்படை மற்றும் சுழியோடிகளின் உதவியுடன் தேடும் நடவடிக்கை தொடர்கின்றது.