ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலையை 70 ரூபாவாக குறைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் காமினி ஜயவிக்கரம பெரேரா தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று (12) நள்ளிரவு முதல் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலை 70 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில், 101 ரூபாவாக காணப்படுகின்ற ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் விலை 31 ரூபாவால் குறைக்கப்படுகிறது.
இந்த விலைக்குறைப்புக்கு மீனவ சங்கங்கள் உடன்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.