அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோர் கூட்டு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.
கையெழுத்திட்ட ஆவணங்களில் இருப்பது என்னவென்று இதுவரை ஊடகங்களுக்கு வௌியிடப்படவில்லை என்று சர்வதேச செய்திகள் கூறுகின்றன.
சிங்கப்பூரில் வரலாற்று சிறப்புமிக்க கலந்துரையாடல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோருக்கு இடையில் இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த சந்திப்பின் பின் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கிம் ஜாங்-உன்னுடன் சிறப்பு உறவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதேவேளை “கடந்த காலத்தை விட்டுவிட போகிறோம்” என்றும் “பெரிய மாற்றத்தை இந்த உலகம் பார்க்கப் போகிறது” என்றும் வட கொரிய தலைவர் கிம் கூறியுள்ளதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.
இரு தலைவர்களும் கையெழுத்திட்ட ஆவணங்கள் இன்று ஊடகங்களுக்கு வௌியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.