நாட்டில் தலைதூக்கியுள்ள பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கரந்தெனிய பிரதேசத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறியுள்ளார்.