ColourMedia
WhatsApp Channel
Homeவெளிநாட்டுசிங்கப்பூர் உச்சிமாநாடு: கிம்மை தொடர்ந்து டிரம்பும் வருகை

சிங்கப்பூர் உச்சிமாநாடு: கிம்மை தொடர்ந்து டிரம்பும் வருகை

0Shares

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடன் நாளை மறுநாள் (ஜூன் 12ஆம் தேதி) நடைபெறவுள்ள உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாள் முன்னரே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் சிங்கப்பூர் சென்றடைந்துள்ளார்.

முன்னதாக, வரலாற்று சிறப்புமிக்க இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இன்று (ஞாயிற்றுகிழமை) காலையே சிங்கப்பூர் சென்றடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருநாட்டு தலைவர்களும் சிறிது தூரத்திலுள்ள வெவ்வேறு ஓட்டல்களில் தங்கியுள்ளனர்.

சிங்கப்பூர் பிரதமரிடம் பேசிய கிம் ஜாங்-உன் “உலகமே இங்கு நடப்பதை உற்றுநோக்குகிறது” என்று கூறினார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்- வட கொரிய தலைவர் கிம் சந்திப்பு, சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் நடைபெற உள்ளது.

அமெரிக்க அதிபரை வட கொரியா தலைவர் சந்திக்க உள்ளது இதுவே முதல் முறையாகும்.

“அமைதியை ஏற்படுத்த வட கொரிய தலைவர் கிம்மிற்கு கிடைக்கும் ஒரே வாய்ப்பு இது” என்று முன்னதாக அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்

இந்நிலையில், சிங்கப்பூர் சென்றடைந்த கிம்மின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்.

சிங்கப்பூர் உச்சிமாநாடு: கிம்மை தொடர்ந்து டிரம்பும் வருகை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் சிங்கப்பூர் வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சிமாநாடு நடைபெறுவதற்கு முன்பாக, இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை சந்திக்க உள்ளனர்.

அமெரிக்கா – வட கொரியா பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தைகளின் முடிவில் கிம், அணுஆயுதங்களை கைவிட்டு விடுவார் என்று அமெரிக்கா நம்புகிறது.

கடந்த 18 மாதங்களாக அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஆகியோர் இடையே அசாதாரண உறவு நிலவியது.

சிங்கப்பூர் சென்றடைந்தார் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்

முன்னதாக, சர்வதேச நாடுகள் எச்சரிக்கை விடுத்து எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பல பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை வட கொரியா நடத்தியது. இதனால் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற ஒரு வருடத்திற்குள், டிரம்பிற்கும், கிம்மிற்கும் இடையே பல கசப்பான பரிமாற்றங்கள் நடைபெற்றன.

அமெரிக்காவை, வட கொரியா தொடர்ந்து அச்சுறுத்தினால், கடும் கோபத்தை கட்டவிழ்த்துவிட வேண்டியிருக்கும் என்று டிரம்ப் உறுதி எடுத்தார். அதற்கு டிரம்பினை, மனநலம் சரியில்லாதவர் என்று கிம் குறிப்பிட்டிருந்தார்.

செய்தி-BBC 

 

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments