ColourMedia
WhatsApp Channel
Homeநீர்கொழும்பு செய்திகள்காரை திருடுவதற்காக நண்பனை கொலை செய்து ஆற்றில் வீசிய மூவரை நீர்கொழும்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்

காரை திருடுவதற்காக நண்பனை கொலை செய்து ஆற்றில் வீசிய மூவரை நீர்கொழும்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்

0Shares

அதி சொகுசு மோட்டார் காரொன்றை திருடி பாகங்களாக்கி விற்பனை செய்வதற்காக நண்பன் ஒருவரை கொலை செய்து ஆற்றில் வீசிய கும்பல் ஒன்றை நீர்கொழும்பு வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த மே மாதம் 23ம் திகதி K X1143 இலக்க  அதி சொகுசு கருப்பு நிற கார் ஒன்றுடன்  திலிப் பர்னாந்து என்ற தமது 22 வயது மகனை காணவில்லை என்று இரேனியஸ் பர்னாந்து என்பவரால் சீதுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

இவ் முறைப்பாடு தொடர்பாக சீதுவை,ஜா-எல,மற்றும் நீர்கொழும்பு வலய குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் நீர்கொழும்பு வலய பொலிஸ்  உயரதிகாரி சந்தன அத்துகோரல அவர்களின் ஆலோசனையில் கூட்டு விசாரணை ஆரம்பிக்க பட்டது.

இவ் விசாரணையின் போது சீதுவ  பகுதியில் மாசா  எனும் பெயர் கொண்ட இசைக்குழு ஒன்றின் தலைவராகிய ஒருவரின் வீட்டில் தொலைந்த காரை பொலிஸார்  மீட்டுள்ளனர் இது சம்பந்தாமாக பொலிஸார்  விசாரணை நடத்திய பொது காரின் உரிமையாளர்  திலிப் பர்னாந்து தமது வீட்டில் கரை நிறுத்திவிட்டு சென்றதாக அவ் இசைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார் அதன் பொது காரை மீட்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் அவ்  இசைக்குழுவின் தலைவரையும் கைது செய்துள்ளனர்.

இவ் வேளையில் கடந்த மே மாதம் 31 திகதி நீர்கொழும்பு   களப்பு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கரையொதுங்கியது இவ் சடலத்தை தனது காணாமல் போன மகனின் சடலம் என்று இரேனியஸ் பர்னாந்து என்பவரால் அடையாளம் காணப்பட்டது.

அதன் பின் நீர்கொழும்பு வலய குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு இரகசிய பொலிஸாருக்கு  கிடைத்த  தகவலின் அடிப்படியில் திவுலபிட்டிய  பகுதியில் 21 வயது இளைஞ்சர் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்திய போது இவ் கொலை தொடர்பாக பல தகவல்களை அவ் இளைஞ்சர் வெளியிட்டு உள்ளார்.

இவ் விசாரணையின் போது  திலிப் பர்னாந்து என்பவர் சீதுவ  கொடுகொட பகுதியில் வளர்ப்பு மீன்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்திவந்துள்ளார். இவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்ய பட்டுள்ள  இசைக்குழு நடத்துபவர்களின்  நண்பர் என்றும் இவர்கள் தினம் தோறும் சந்தித்து வருபவர்கள் என்றும் தெரியவந்துள்ளது

இவ்  இசைக்குழுவின் தலைவருக்கு பணப்பிரச்சனை காரணமாக தனது நண்பனின் காரை திருடி பாகங்களாக்கி விற்பனை செய்வதற்காக தனது நண்பனை கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது

இவரை கொலை செய்வதற்காக கடந்த 23ம் திகதி இரவு அவ் இசை குழுவினர் இசை பழகும் இடத்துக்கு  திலிப் பர்னாந்து என்பவரை வரவழைத்து உள்ளார்கள்.

அவ் வேளையில் மலசல கூடத்தில் ஒளிந்திருந்த இருவர் கிரிக்கெட்  மட்டைகளை கொண்டு அவரின் தலையில் பின் புறமாக தாக்கி உள்ளார்கள் பின் வயர் ஒன்றை கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்கள்

பின் இறந்தவரின் காரில் இருந்த மீன் உணவுகளை  பாதையோரத்தில் வீசிவிட்டு சடலத்தில் கருங்கல் ஒன்றை கட்டி காரில்  ஏற்றி சென்று தண்டுகம ஆற்றில் வீசி உள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று நபர்களிடம் நீர்கொழும்பு வலய குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் மேற்கொள்ள பட்ட விசாரணைகளில் இறந்தவரின் பாதணிகள் அடையாள அட்டை மற்றும் கொலைக்கு பயன்படுத்திய கிரிக்கெட் மட்டைகள் வயர் ஆகியன கைப்பற்ற பட்டுள்ளது.

இவ் விசாரணைகள் அனைத்தையும் நீர்கொழும்பு வலய குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு சிரேஷ்ட பொலிஸ்  உயரதிகாரி சந்தன அத்துகோரல அவர்களின் ஆலோசனையில் பிரதி பொலிஸ் உயரதிகாரி Y.G.R.M.ரிப்பாட் மற்றும் ஜயந்த அத்துகோரல  ஆகியோரின் வழிகாட்டலில் சீதுவை,ஜா-எல,மற்றும் நீர்கொழும்பு வலய குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் நீர்கொழும்பு வலய பொலிஸ்  பொறுப்பதிகாரி திசாநாயக்க பொலிஸ் அதிகாரி M.L.M .ரௌப் அவர்களின் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments