மண்ணெண்ணெயின் விலை குறைக்கப்படவிருப்தாக கடற்றொழில் ராஜாங்க அமைச்சர் திலிப் வெத-ஆராச்சி தெரிவித்துள்ளார்.
மீன்பிடி சமூகம் உட்பட குறைந்த வருமானம் பெறுவோர் எதிர்கொண்டு வரும் நெருக்கடிகளைக் கருத்திற்கொண்டு நாளை முதல் மண்ணெண்ணெயின் விலையைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக ராஜாங்க அமைச்சர் திலிப் வெத-ஆராச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான ஒரு பேச்சுவார்த்தை அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. அமைச்சர் மங்கள சமரவீர உட்பட திறைசேரியின் உயர் மட்ட அதிகாரிகளுடன் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இதன்படி ஒரு லீற்றர் மண்ணெண்ணெயை 25 முதல் 30 ரூபா வரையான தொகையால் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.