ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுஜனாதிபதியின் சுற்றுச்சூழல் தின செய்தி

ஜனாதிபதியின் சுற்றுச்சூழல் தின செய்தி

0Shares

மனித நாகரிகத்தின் எதிர்கால இருப்பினையோ அல்லது இழப்பினையோ தீர்மானிக்கும் காரணி சுற்றாடலேயாகும் என்பதே கடந்த நூற்றாண்டு எமக்கு கற்றுத்தந்துள்ள ஒட்டுமொத்த பாடங்களின் சாராம்சமாகும்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தி பின்வருமாறு:

வாழ்த்துச் செய்தி

மனித நாகரிகத்தின் எதிர்கால இருப்பினையோ அல்லது இழப்பினையோ தீர்மானிக்கும் காரணி சுற்றாடலேயாகும் என்பதே கடந்த நூற்றாண்டு எமக்கு கற்றுத்தந்துள்ள ஒட்டுமொத்த பாடங்களின் சாராம்சமாகும். அதிகாரத்தை இலக்காகக் கொண்ட யுத்தங்கள், வகுப்பு மோதல்கள், இன மோதல்கள் உள்ளிட்ட சகல தலைப்புக்களையும் விட சுற்றாடல் சர்வதேச மாநாடுகளில் முதலிடம் பெறுவதற்கும் இதுவே காரணமாகும்.

விஞ்ஞான மறுமலர்ச்சியின் பின்னரான காலப்பகுதியில் அபிவிருத்தி என அடையாளப்படுத்தப்பட்ட போட்டித்தன்மைமிக்க பல்பொருள் பயன்பாடுடைய வாழ்க்கை முறைமையானது, மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே இருந்துவந்த சகவாழ்வு உறவை வெகுவாக சேதப்படுத்தியது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட எளிமையான பேண்தகு வாழ்க்கை முறையினைக் கொண்டிருந்த இலங்கையர்களான நாம் எந்தவித திறனாய்வுமின்றி அந்த வாழ்க்கை முறையை தழுவிக்கொண்டோம். இன்று நாம் எதிர்நோக்கும் கொசு, நுளம்பு தொல்லை முதல் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, மலைகளின் சரிவு வரையான இயற்கை அனர்த்தங்களையும் தொற்றா நோய்களாக எம்மைப் பாதிக்கும்; சுகாதார பிரச்சினைகளையும் இந்த அபிவிருத்தி நடைமுறையினாலேயே நாம் அனுபவிக்க நேர்ந்துள்ளது என்பதை தர்க்கரீதியாக இனங்கண்டு ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கின்றது.

அபிவிருத்தியுடன், பின்னிப்பிணைந்திருக்கும் இந்த இக்கட்டான தன்மையிலிருந்து விடுபட்டு, சர்வதேச சுற்றாடல் தினத்தைக் கொண்டாடுவது இயலாத காரியமாகும். இதனாலேயே ‘முறையற்ற பிளாஸ்டிக் பாவனையினால் ஏற்படும் சுற்றாடல் மாசடைவைத் தடுப்போம்’ என்ற தொனிப்பொருளில் இவ்வருட சுற்றாடல் தினக் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சுற்றாடல் பற்றிய கலைநயம்மிக்க வர்ணனையை விட எமது வாழ்க்கை முறையினால் சுற்றாடலுக்கு ஏற்படும் தாக்கங்களை ஆழமாக உணர்ந்து, சூழல்நேய வாழ்க்கை முறையை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதனையே இந்த தொனிப்பொருள் எமக்கு கட்டாயப்படுத்துகின்றது.

மனிதனும் இயற்கையின் ஒரு படைப்பே என்பதை உணர்ந்து, இயற்கையுடன் இணைந்து வாழ்வதற்கான புரிந்துணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் சர்வதேச சுற்றாடல் தின கொண்டாட்டங்களில் ஈடுபட அணிதிரளும் சுற்றாடல் நேசிகளுடன் நானும் இணைந்துகொள்ளும் அதேவேளை நாட்டு மக்களையும் எம்முடன் இணைந்துகொள்ளுமாறு அழைக்கின்றேன்.

மைத்ரிபால சிறிசேன

2018 ஜூன் 05 ஆம் திகதி

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments