நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகிய மாணவர்களுக்கு நீர்கொழும்பு தமிழர் நலன்புரி மன்றம் ஊக்குவிப்புத் தொகை வழங்கி கௌரவித்தது.
இந்நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (3-12-2017) மாலை மன்றத்தின் தலைவர் வைத்திய கலாநிதி ஜெயலிங்கம் தலைமையில் மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
மன்றத்தின் முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் 2016 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதி பல்கலைக் கழகங்களுக்கு தெரிவான எட்டு மாணவர்கள் ஊக்குவிப்புத் தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.