செய்தி:- முஸாதிக் முஜீப்
அமேசன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேசமாநாட்டு மண்டபத்தில் கடந்த புதன்கிழமை (30) இடம்பெற்றது. கல்லூரியின் தலைவர் இல்ஹாம் மரைக்கார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நீர்கொழும்பு பெரியமுல்லையை சேர்ந்த மாணவி ஒருவரும் பட்டம் பெற்றுள்ளார்.
நீர்கொழும்பு பெரியமுல்லையை சேர்ந்த றில்வி ஹூஸ்னா தம்தியினரின் மூத்த புதல்வியான பாதிமா ஜுமானா என்ற மாணவியே பட்டம் பெற்றுள்ளார்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.