சிங்ஹராஜவனம் உட்பட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை பார்வையிடச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி வீடுகளை அமைக்க வனப் பாதுகாப்புத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வனங்களுக்கு அருகில் வசிப்பவர்களை இணைத்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் உரிய பகுதிகளில் உள்ள வீடுகளை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம்.
தங்கியிருக்கும் காலப்பகுதியில் வீட்டுத் தோட்டங்களிலிருந்து மரக்கறி வகைகள், பழங்கள் என்பனவற்றையும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.