போலியான முகப்புத்தக கணக்கு, போலியான செய்திகளை வெளியிடும் நபர்களை அடையாளம் காண்பதற்கான நடைமுறையை ஏற்படுத்துவதற்கு முகப்புத்தக சமூக இணையத்தளம் ஒரு மாத காலத்திற்கு இடை நிறுத்துவதற்கு பப்புவா நியூகினியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாளாந்தம் அதிகரித்து வரும் இவ்வாறான சம்பவங்களை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்நாட்டின் ஊடகத்துறை அமைச்சர் சேம்பெசில் தெரிவித்துள்ளார்.
தமது நாட்டில் இந்த தடையை முன்னெடுக்க மேற்கொள்ளப்பட்டடுள்ள தீர்மானம் குறித்து ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.
பப்புவா நியூகினியாவில் 10 சதவீதமான மக்களே இணையத்தள வசதியை கொண்டுள்ளனர். இருப்பினும் எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.
இணையத்தளம் ஊடாக போலியான விடயங்களையும், செய்திகளையும் வெளியிடுவதை தடுக்க அந்நாட்டு அரசாங்கம் தற்போது இருந்தே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இணையத்தள சைவர் குற்றச்சட்டத்தின் கீழ் இந்த சட்டத்தை மீறிய நபர்கள் யார் என்பதை இந்த மாதத்தில் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த பப்புவா நியூகினியா அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதேபோன்று பப்புவா நியூகினியாவிலுள்ள மக்கள் தமது இணையத்தள செயற்பாட்டு வசதிகளை செய்ய அவர்களது சமூக இணையத்தள வலைப்பின்னலை ஏற்படுத்துவது தொடர்பில் தமது அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.