அரச நில அளவையாளர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் புதிய வரைப்படம் நாளை வெளியிடப்படவுள்ளது.
கொழும்பில் புதிதாக அமைக்கப்படும் துறைமுக நகரத்தை உள்ளடக்கியதினால் இலங்கையின் நிலப்பரப்பு 2 கிலோமீற்றரினால் அதிகரித்துள்ளதாக நில அளவை ஆணையாளர் பி.எம்.பி.உதயகாந்த எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.
இதேபோன்று மொரஹாகந்த உள்ளிட்ட நீர்பாசனங்கள் பல இந்த வரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
1.500 என்ற அளவில் புதிய இலங்கை வரைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.
யூன் மாதம் நடு பகுதியில் பொது மக்களுக்கு இதை கொள்வனவு செய்ய முடியும் என்று அவர் தெரிவித்தார்.
இதன் டிஜிட்டல் பதிவின் பிரதிகளை நில அளவை திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் கொள்வனவு செய்ய முடியும்.