ColourMedia
WhatsApp Channel
Homeவிளையாட்டுரசிகர்களே மன்னித்துக்கொள்ளுங்கள் – ஒன்று வெற்றி பெற்வோம் இல்லை கற்றுக்கொள்வோம் – விராட் கோலி மன்னிப்பு

ரசிகர்களே மன்னித்துக்கொள்ளுங்கள் – ஒன்று வெற்றி பெற்வோம் இல்லை கற்றுக்கொள்வோம் – விராட் கோலி மன்னிப்பு

0Shares

ஐபிஎல் 11-வது சீசனில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றார்போல் ஆர்சிபி அணி விளையாட முடியாததற்கு அந்த அணியின் கேப்டன் விராட் கோலி ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் இடம் பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, இந்த முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமலே போட்டியில் இருந்து வெளியேறியது. 14 போட்டிகளில் பங்கேற்று விளையாடிய ஆர்சிபி அணி 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தைப் பிடித்தது


வலுவற்ற பந்துவீச்சு, நிலைத்தன்மை இல்லாத பேட்டிங் ஆகியவை இந்த முறை ஆர்சிபி அணியின் மோசமான செயல்பாட்டுக்கு முக்கியக் காரணமாக அமைந்தன. அணியின் தோல்விக்குப் பின் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காமல் கேப்டன் விராட் கோலி இருந்து வந்தார்.

இந்நிலையில் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரி விராட் கோலி, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

எங்களால் நினைத்த அளவுக்கு 11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் சிறப்பாக விளையாட முடியவில்லை. இந்த சீசன் மிகச் சிறப்பாகச் சென்றது என்று கூறும் அளவுக்கு நாங்கள் பெருமைப்படவில்லை. நாங்கள் விளையாடிய விதம் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது, காயப்படுத்தி இருக்கிறது. ஆர்சிபி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எங்களால் விளையாட முடியாததை நினைத்து வேதனைப்படுகிறேன். ரசிகர்களிடம் ஆழ்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இதுவும் வாழ்க்கையின் ஒருபகுதிதான். வாழ்க்கையில் உங்களுக்குத் தேவையானது எல்லாம் கிடைத்து விடாது. அடுத்த சீசனில் நாம் எப்படி விளையாட வேண்டும், தயாராக வேண்டும் என்பதை வீரர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்த சீசனில் அனைத்தும் மாற வேண்டும் என விரும்புகிறேன். அடுத்த ஆண்டு, ஐபிஎல் சீசனில் இன்னும் கூடுதல் முயற்சிகளோடு, அதிகமான பலத்தோடு நாங்கள் களமிறங்கி விளையாடுவோம்.

இவ்வாறு கோலி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அதிக ரன்களைச் சேர்த்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 14 போட்டிகளில் 548 ரன்கள் சேர்த்து 6-வது இடத்தில் உள்ளார். இவரின் சராசரி 54.80. ஏபி டிவில்லியர்ஸ் 480 ரன்கள் சேர்த்துள்ளார்.

https://twitter.com/imVkohli/status/999534985030889472

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments