ColourMedia
WhatsApp Channel
Homeதொழில்நுட்பம்புதிய அம்சங்களால் கலக்கும் வாட்ஸ்அப் – பயனர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி

புதிய அம்சங்களால் கலக்கும் வாட்ஸ்அப் – பயனர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி

0Shares

ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் வாட்ஸ்அப் க்ரூப்களுக்கு அதிக வசதிகளை வழங்குகிறது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் தற்சமயம் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய வசதிகள் முன்னதாக ஆன்ட்ராய்டு பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய அப்டேட் இன்ஸ்டால் செய்தவர்கள் வாட்ஸ்அப் க்ரூப்களில் டிஸ்க்ரிப்ஷன் சேர்க்க முடியும், க்ரூப் அட்மின்களுக்கு கூடுதலாக புதிய வசதிகள், மென்ஷன்ஸ் அம்சம் மற்றும் க்ரூப்களில் உள்ளவர்களை தேடும் அம்சம் வழங்குகிறது.

இந்த வசதிகள் அனைத்தும் பழைய க்ரூப்களுக்கும், புதிதாய் உருவாக்கப்படும் க்ரூப்களிலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. க்ரூப்களை உருவாக்கும் போது க்ரூப் குறித்த விவரங்களை க்ரூப் டிஸ்க்ரிப்ஷன் பகுதியில் எழுத முடியும். இதனை க்ரூப்-இல் உள்ளவர்கள் மற்றும் புதிதாய் இணைபவர்களும் பார்க்க முடியும்.

க்ரூப் டிஸ்க்ரிப்ஷன்களை க்ரூப் அட்மின்கள் மற்றும் க்ரூப்-இல் இருப்பவர்களும் மாற்றியமைக்க முடியும். மற்றவர்கள் இவ்வாறு செய்ய வேண்டாம் என நினைக்கும் க்ரூப் அட்மின்கள் இதற்கான வசதியை முடக்க முடியும். இதே போன்று க்ரூப் சப்ஜக்ட் மற்றும் ஐகானினை யார் மாற்ற வேண்டும் என்பதை க்ரூப் அட்மின்கள் முடிவு செய்ய முடியும்.

இத்துடன் க்ரூப் அட்மின்கள் மற்ற க்ரூப்களில் இருப்பவர்களின் அட்மின் அனுமதிகளை திரும்ப பெற முடியும். மேலும் க்ரூப் உருவாக்குபவரை இனி க்ரூப்-ஐ விட்டு வெளியேற்ற முடியாது. வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் க்ரூப்களில் மென்ஷன்ஸ் எனும் புதிய வசதியை பயன்படுத்த முடியும்.

w 28

இதேபோன்று க்ரூப் கேட்ச் அப் அம்சம் கொண்டு பயனர்கள் மென்ஷன் செய்யப்பட்டு இருக்கும் மெசேஜ்களை கண்டறிந்து அவற்றுக்கு பதில் அனுப்ப முடியும். இந்த அம்சத்தை இயக்க க்ரூப் பயனர்கள் @ பட்டனை க்ளிக் செய்தால் சாட் ஸ்கிரீனின் கீழே வலதுபுறமாக மென்ஷன் செய்யப்பட்ட மெசேஜ்களை பார்க்க முடியும்.

 

வாட்ஸ்அப் க்ரூப்களில் உள்ளவர்களை ஸ்கிரால்-டவுன் செய்து தேடாமல், நேரடியாக சர்ச் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. க்ரூப்களில் இருப்பவர்களை தேட க்ரூப் இன்ஃபோ பகுதியில் உள்ள சர்ச் ஐகானை க்ளிக் செய்தாலே போதும்.

w 27

க்ரூப் இன்விடேஷன்களில் ஸ்பேம் அளவை குறைக்கும் நோக்கில் க்ரூப்களில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் சேர்ப்பது கடினமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments