ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கானது எதிர்வரும் 2018 பெப்ர்வரி மாதம் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
வழக்கின் முதலாம், இரண்டாம் சாட்சியாளர்களான சாட்சியாளர்களான பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் நீதிமன்றின் மூன்றாவது அறிவித்தலுக்குட்பட்டு இன்றைய தினமும் நீதிமன்றத்திற்கு சாட்சியமளிக்க வருகை தராமையால் இந்த வழ்ககை தொடர முடியாத நிலையில், பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களு ஆரச்சி ஒத்தி வைத்தார்.
இன்றைய தினம் இது தொடர்பிலான வழக்கு விசாரணை மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது மன்றில் ஆஜரான அரசின் மேலதிக சொலிசிற்றர் ஜெனரால் வசந்த நவரட்ன பண்டார, முதலாவது சாட்சியாளர் பிரதமர் ரணிலும் இரண்டாம் சாட்சியாளர் ஜனாதிபதி மைத்திரியும் பாராளுமன்றில் இடம்பெறும் வரவு செலவு திட்ட வாதங்களில் பங்கேற்பதால் இன்று மன்றில் ஆஜராக முடியாது உள்ளதாகவும் அது தொடர்பில் அவர்கள் அறிவித்ததாகவும் பிரிதொரு தினத்தில் மன்றில் சாட்சியமளிக்க அவர்கள் ஆஜராவர் எனவும் கூரினார். அதன்படி வழக்கை ஒத்திவைக்கவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படியே இவ்வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26, 27 ஆம் திகதிகளிலும் மார்ச் மாதம் 2 ஆம் திகதியும் விசாரணை செய்ய நீதிபதி விக்கும் களு ஆர்ச்சி அறிவித்தார்.
அத்துடன், அன்றையதினம் ஜனாதிபதி மைத்திரி மற்றும் பிரதமர் ரணிலை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இம் மாதம் 10ம் திகதி முதல் 30ம் திகதி வரை அவுஸ்திரேலியா செல்ல திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது. திஸ்ஸ அத்தநாயக்கவின் சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ முன்வைத்த வெளி நாட்டு பயணக் கோரிக்கைக்கு அனுமதியளித்தே நீதிமன்றம் இந்த அனுமதியை வழ்னக்கியது. அதன்படி டிசம்பர் 10 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிவரை அவிஸ்திரேலியா செல்ல நீதிமன்றம் தடையை தளர்த்திய நிலையில், மீள 2018 ஜனவரி 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கடவுச் சீட்டை மீள நீதிமன்றில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதி விக்கும் களுஆரச்சி உத்தர்விட்டார்.