பஸ் கட்டண அதிகரிப்பு இன்று (23) முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நூற்றுக்கு 12.5 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
21 ரூபா முதல் 25 ரூபா வரையிலான கட்டணம் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 29 ரூபா முதல் 34 ரூபா வரையிலான கட்டணம் 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
35 ரூபாவுக்கும் 40 ரூபாவுக்கும் இடைப்பட்ட கட்டணம் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 42 ரூபாவுக்கும் 48 ரூபாவுக்கும் இடையிலான கட்டணம் 6 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, 50 ரூபாவுக்கும், 60 ரூபாவுக்கும் இடையிலான கட்டணம் 7 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
62 ரூபாவிற்கும் 67 ரூபாவுக்கும் இடைப்பட்ட கட்டணம் 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 69 ரூபா முதல் 73 ரூபா வரையிலான கட்டணம் 9 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
76 ரூபாவுக்கும், 81 ரூபாவுக்கும் இடைப்பட்ட கட்டணம் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில் புதிய திருத்தங்களுக்கு அமைய குறைந்தபட்ச 12 ரூபாவாகவும் நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் கட்டண விபரங்கள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு புதிய விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.