நீர்கொழும்பு நகரை நுளம்புகள் அற்ற தூய நகரமாக மாற்றி அமைப்பதற்காக நீர்கொழும்பு நகர மேயர் தயான் லான்சா அவர்களால் “ZERO MOSQUITO NEGOMBO” என்ற பெயரில் விசேட வேலைத்திட்டம் நேற்றைய(21) தினம் காலை 06.00 மணிக்கு நீர்கொழும்பு பஸ் நிலையத்துக்கு முன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன் நிகழ்வில் நீர்கொழும்பு மாநகர சபை முதல்வர் தயான் லான்ச, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, மேல் மாகாணசபை உறுப்பினர் M.S.M.சகவுல்லா,மற்றும் நீர்கொழும்பு மாநகரசபை உறுபினர்கள்,சுகாதார பிரிவு அதிகாரிகள்,ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இங்கு கருத்து தெரவித்த நீர்கொழும்பு நகர மேயர் தயான் லான்சா இந்த “ZERO MOSQUITO NEGOMBO” வேலைத்திட்டம் இதுவரை தினம் ஒரு வேலைத்திட்டம் என்ற வேலைத்திட்டத்திற்கு மேலதிகமாக தினம் தோறும் இடம்பெறும் என்றும் நீர்கொழும்பில் அனைத்து பகுதிகளுக்கும் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்க படுமென்றும் இவ் வேலைத்திட்டத்திற்கு பொது மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று தெரிவித்தார்.
புகைப்படங்கள் மேயர் ஊடகப்பிரிவு