சிவனொளிபாத மலை பாதயாத்திரை இன்று ஆரம்பமாகின்றது. இதற்கான சமய நிகழ்வுகள் நேற்று நள்ளிரவுமுதல் ஆரம்பமாகின்றது.
இந்த முறை பாத யாத்திரையின்போது நீர் புட்டிகள் உட்பட்ட உக்காத பொருட்களை சிவனொளிபாத மலைக்கு கொண்டு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
பொலிதீன் தொடர்பில் அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாடுகளை இந்த முறை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவதாக நுவரெலியா மாவட்டத்தின் சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் காமினி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருட யாத்திரை காலத்தில் நீர் புட்டிகள் உட்பட்ட உக்காத பொருட்கள் பொதுச் சூழலில் வீசி எறியப்பட்டமையினால் பொது இடங்களில் சுகாதார பாதுகாப்பு நெருக்கடிக்கு முகம் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.