ColourMedia
WhatsApp Channel
Homeவிளையாட்டுஇலங்கைக்கு எதிரான டெஸ்டில் சாதனையொன்றை நோக்கி இந்தியா

இலங்கைக்கு எதிரான டெஸ்டில் சாதனையொன்றை நோக்கி இந்தியா

0Shares

டெஸ்ட் கிரிக்கெட் வர­லாற்றில் தொடர்ச்­சி­யாக அதிக தொடர்­களை வெற்­றி­கொண்ட அணி­யாக இங்­கி­லாந்தும், அவுஸ்­தி­ரே­லி­யாவும் திகழ்­கின்றன.

இங்­கி­லாந்து அணி 1884ஆ-ம் ஆண்­டி­லி­ருந்து 1892ஆ-ம் ஆண்டு வரை தொடர்ந்து 9 டெஸ்ட் தொடர்­களை கைப்­பற்றியிருந்­தது.

இதே போல் அவுஸ்­தி­ரே­லியா 2005ஆ-ம் ஆண்­டி­லி­ருந்து 2008ஆ-ம் ஆண்­டுக்குள் தொடர்ந்து 9 தொடர்­களை வசப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இந்த உலக சாத­னையை சமன் செய்ய இந்­திய அணிக்கு அரு­மை­யான சந்­தர்ப்பம் கனிந்­துள்­ளது.

விராட் கோஹ்லி தலை­மை­யி­லான இந்­திய அணி தற்­போது தொடர்ந்து 8 டெஸ்ட் தொடர்­களை வென்­றுள்­ளது. அதா­வது 2015ஆ-ம் ஆண்டில் இலங்கை (2–-1), தென்­னா­பி­ரிக்கா (3–-0), 2016ஆ-ம் ஆண்டில் மேற்­கிந்­தியத் தீவுகள் (2–-0), நியூ­ஸி­லாந்து (3–-0), இங்­கி­லாந்து (4–-0), 2017ஆ-ம் ஆண்டில் பங்­க­ளாதேஷ் (1–-0), அவுஸ்­தி­ரே­லியா (2–-1), இலங்கை (3–-0) ஆகிய அணி­களை வெற்­றி­கொண்­டுள்­ளது.

இப்­போது இலங்­கை­யு டன் நடை­பெற்­று­வரும் டெஸ்ட் தொடரை இந்­தியா வெற்றி காணும் பட்சத்தில், தொடர்ச்சியாக  அதிக டெஸ்ட் தொடர்களை வெற்றி கொண்ட அணிகள் வரிசையில் இந்தியாவும் இணையும்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments