இலங்கை அணி அடுத்த வருடம் ஜனவரி மாதம் அவுஸ்திரேலிய அணியுடன் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளது.
இத் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளமை விசேட அம்சமாகும்.
இதுவரையில் இலங்கை அணி ஒரே ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளது.
அது கடந்த ஆண்டு டுபாயில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியாகும்.
அப் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று தான் விளையாடிய முதலாவது பகலிரவு போட்டியை வெற்றிகொண்ட சாதனையையும் படைத்தது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.
இதற்கு முன் கடந்த 2016ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணி இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தது.
இத் தொடரில் அவுஸ்திரேலிய அணி “வைட் வொஷ்” தோல்வியைத் தழுவி வெறுங்கையுடன் நாடு திரும்பியிருந்தது.
அப்போது ஸ்மித், வோர்னர் ஆகியோரும் அணியில் இடம்பெற் றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.