ColourMedia
WhatsApp Channel
Homeதொழில்நுட்பம்பேஸ்புக்கின் அடுத்த அதிரடி திட்டம்

பேஸ்புக்கின் அடுத்த அதிரடி திட்டம்

0Shares

இரண்டு பில்லியன் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலி கணக்கு வைத்துள்ளவர்களை கண்டறியும் முயற்சியில் பேஸ்புக்  இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கணக்கு வைத்துள்ளவர்கள் உண்மையில் மனிதர்கள் தானா என கண்டறியும் விதமாக அவர்களின் உண்மை புகைப்படத்தை கேட்க உள்ள அந்நிறுவனம், சோதனை முடிந்தவுடன் டெலிட் செய்யப்படும் என உத்திரவாதம் வழங்கவுள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் ஹெல்லோ தொழில்நுட்பத்தயும் பயன்படுத்தி போலி கணக்குகளை நீக்கும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில் பேஸ்புக் நிறுவனமும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.

இதுகுறித்து ட்விட்டர் பயணாளி @flexlibris வெளியிட்டுள்ள ஸ்கிரீன்ஷாட்டில், கணக்கு வைத்துள்ளவரின் தெளிவான புகைப்படத்தை கோரும் பேஸ்புக், கணக்கு உறுதி செய்யப்படவுடன் சர்வர்களிலிருந்து நிரந்தரமாக அழிக்கப்படும் என உறுதியளிப்பது போல் உள்ளது.

சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது, புதிய கணக்கு தொடங்குவது, நட்பு கோரிக்கை அனுப்புவது போன்ற தருணங்களில் இந்த சோதனை நடைபெறுமென பேஸ்புக் உறுதி செய்துள்ளது.

பேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஆட்டோமேட்டட் மற்றும் மேனுவல் முறைகளை சோதனை செய்வதில் போட்டோ டெஸ்டும் ஒரு அம்சம் என தெரிவித்துள்ளார்.

கணக்கு மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்தது தானா என புகைப்படம் மூலம் கண்டறியக்கூடிய இந்த சோதனை முழுக்க முழுக்க ஆட்டோமேட்டிக் முறையிலேயே நடக்கவுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதமே இதுபோல் சோதனை நடந்ததாகவும், ‘தற்சமயம் உங்களால் இந்த கணக்கை லாக் இன் செய்ய முடியாது.

உங்களது புகைப்படம் உறுதி செய்யப்பட்டதும் உங்களை தொடர்பு கொள்கிறோம், தற்சமயம் லாக் அவுட் செய்யப்படுகிறது என பேஸ்புக் தெரிவித்ததாகவும் சில வாடிக்கையாளர்கள் கூறியிருந்தனர்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments