மாகாணங்களுக்கு இடையிலான ஒருநாள் கிரிகெட் சுற்றுத்தொடர் போட்டிகளில் கொழும்பு, கண்டி அணிகள் வெற்றிபெற்றுள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் அடங்கிய கிரிக்கட் சுற்றுத்தொடரின் முதலாவது போட்டியில் தம்புள்ள அணியை எதிர்கொண்ட கொழும்பு அணி நான்கு ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணி 40 ஓவர்களில் ஆறு விக்கட் இழப்பிற்கு 270 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
கொழும்பு 39ஆவது ஓவரில் 6 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. டக்வேர்;த் லுவிஸ் முறையின் கீழ் வெற்றி இலக்கு தீர்மானிக்கப்பட்டது. இதில் லஹிரு திரிமான்ன ஆட்டமிழக்காமல் 107 ஓட்டங்களை தன்வசப்படுத்தினார்.
இரண்டாவது போட்டியில் , காலி அணியை எதிர்கொண்ட கண்டி அணி 28 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்தப் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டதால் டக்வேர்த் லுவிஸ் முறை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி 250 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. கண்டி அணி 2 விக்கெட் இழப்பிற்கு 217 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் வெற்றி இலக்கு மாற்றப்பட்டது. இந்தப் போட்டியில் மஹேல உடவத்த 116 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.