இன்று (ஜனவரி 22) காலை தங்காலை பெலியத்தவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் (SDIG) மேற்பார்வையின் கீழ் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் SSP நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பேச்சாளர், மேற்படி விசாரணைகளை மேற்கொள்வதற்காக தென் மாகாணத்திற்கு பொறுப்பான SDIG பின்வரும் பொலிஸ் குழுக்களை நியமித்துள்ளார். தென் மாகாண குற்றப்பிரிவு, தங்காலை பிரிவு குற்றத்தடுப்பு பிரிவு, தங்காலை தலைமையக பொறுப்பதிகாரியின் கீழ் தனியான குழு, பெலியத்த பொலிஸ் குழு, பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழு மற்றும் புலனாய்வு அதிகாரிகள் குழு. இன்று அதிகாலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த வெளியேறு பகுதியில் டிபென்டர் மீது வாகனத்தில் வந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அபே ஜன பல பக்ஷய அரசியல் கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐவர் கொல்லப்பட்டனர். டிஃபென்டரில் இருந்த ஐவரில் நால்வர் சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றுமொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதோடு, சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;