ColourMedia
WhatsApp Channel
Homeஆன்மீகம்இன்றைய ராசிபலன் - 21.01.2024

இன்றைய ராசிபலன் – 21.01.2024

0Shares

பஞ்சாங்கம்

நாள்சோபகிருது வருடம் தை மாதம் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 21.01.2024
திதிஇன்று இரவு 09.58 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி
நட்சத்திரம்இன்று காலை 06.02 வரை கிருத்திகை. பின்னர் ரோகிணி
யோகம்இன்று முழுவதும் அமிர்த யோகம்.
நல்லநேரம்காலை: 07.30 முதல் 08.30 மணி வரை
காலை: 10.30 முதல் 11.30 மணி வரை மாலை : 03.30 முதல் 04.30 மணி வரை மாலை : 01.30 முதல் 02.30 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: மாலை 04.30 முதல் 06.00 மணி வரை. எமகண்டம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை. குளிகை: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
சூலம்மேற்கு
பரிகாரம்வெல்லம்

மேஷ ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். திடீர் செலவுகளும் ஏற்படும். முருகப்பெருமானை வழிபட சிரமங்கள் அறவே நீங்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

ரிஷப ராசி அன்பர்களே!

அனுகூலமான நாள். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையாக இருப்பது அவசியம். உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அம்பிகையை வழிபட மற்றவர்களால் ஏற்பட்ட அவப் பெயர் நீங்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

மிதுன ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பிற்பகலுக்குமேல் மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மாலையில் உறவினர்கள் மூலம் கிடைக்கும் தகவல் சற்று சங்கடத்தை ஏற் படுத்தும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். துர்கை வழிபாடு அளவற்ற மகிழ்ச்சியைத் தரும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.

கடக ராசி அன்பர்களே!

தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் சாதகமாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். நண்பர்களின் மூலம் எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். சக வியாபாரிகளால் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு. வேங்கடேச பெருமாளை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு.

சிம்ம ராசி அன்பர்களே!

சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். அவசியம் ஏற்பட்டால் தவிர வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள். தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் விலகும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மாலையில் குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும். சிவபெருமானை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை நன்றாக யோசித்து எடுப்பது நல்லது.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.

துலா ராசி அன்பர்களே!

இன்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத செலவு களால் கடன் வாங்கவும் நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். இன்று லட்சுமி நரசிம்மரை வழிபட பல வகைகளிலும் அனுகூலப் பலன்கள் ஏற்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காலையில் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் சில சங்கடங்கள் ஏற்படும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு இருப்பதுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். மறைமுக எதிர்ப்பு நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. விற்பனை வழக்கம்போலவே இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கப் பெறலாம்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கக்கூடும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

தனுசு ராசி அன்பர்களே!

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். பிற்பகலுக்கு மேல் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். ஆஞ்ச நேயரை வழிபட முக்கிய முடிவுகள் சாதகமாகும்,

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

மகர ராசி அன்பர்களே!

பல வகைகளிலும் அனுகூலமான நாள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். செரிமானப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. வீட்டில் குடும்பத்தினருடன் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றி நிம்மதி பெறுவீர் கள். நண்பர்கள் வகையில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். சக வியாபாரிகளிடம் இணக்கமாக நடந்துகொள்ள வும். விநாயகரை வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண விவகாரத்தில் கவனமாக இருக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும்.

கும்பராசி அன்பர்களே!

புதிய முயற்சிளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. வாழ்க்கைத் துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தரு வார். மாலையில் பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு இளைய சகோதரரால் சங்கடங்கள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். சரபேஸ்வரரை வழிபட சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும்.

மீனராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். முக்கிய முடிவு எடுக்க உகந்த நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சியும் உற்சாகமும் தருவதாக இருக்கும். தாயின் விருப்பத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். இன்று விநாயகரை வழிபட நன்மைகளைக் கூடுதலாகப் பெறலாம்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;

ColourMedia WhatsApp Channel Invite

https://whatsapp.com/channel/0029VaCLbG1GufJ0P80wW90D

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments