லொறி ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை வங்கியின் பரவகும்புக கிளையின் உதவி முகாமையாளராக கடமையாற்றிய பெண் மற்றும் அவரது தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குருந்துகஹஹெதப்ம நுழைவாயிலில் இருந்து காலி நோக்கி மூன்று கிலோமீற்றர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த மகள் கொழும்பில் இருந்து இலங்கை வங்கியின் நலன்புரி வேனில் தனது தாயாரை வைத்தியரிடம் காட்டி மருந்து எடுத்துக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது, லொறி ஒன்றின் பின்னால் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;